எண்ணெய் நிறுவனங்களுக்கு மேலும் ரூ 14 ஆயிரம் கோடி உதவி

இந்த நிறுவனங்கள் பெட்ரோல், டீஸல், கெரோஸின் மற்றும் சமையல் எரிவாயுவை மானிய விலைக்கு விற்று வருவதாகவும் இதனால் ரூ 31, 621 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோலியப் பொருள்களுக்கு மேலும் விலை உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள். அல்லது உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.
இந்தக் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே ரூ 12000 கோடியை முதல்கட்ட உதவித் தொகையாக மத்திய அரசு அறிவித்தது. இப்போது மேலும் ரூ 14000 கோடி ரொக்க நிதி உதவியை நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், "நாங்கள் ரூ 19620 கோடி கேட்டிருந்தோம். ஆனால் நிதித்துறை ரூ 14000 கோடிதான் ததந்துள்ளது..." என்றார்.
கச்சா எண்ணெய் கொள்முதல் விலையை விட குறைவான விலைக்கு பெட்ரோல், டீஸல், கெரோஸின் விற்கப்படுவதால் 2009-2010 ஆண்டில் மட்டும் ரூ 46,051கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதைத் தவிர்க்க, பெட்ரோலியப் பொருள்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் தங்களுக்கே வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருகின்றன.
இதுகுறித்து முடிவு செய்ய அடுத்தவாரம் மத்திய அமைச்சர்கள் குழு கூடுகிறது
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications