ஐபிஎல் மீதான வழக்கு-சரத்பவாரையும் சேர்க்க பாம்பே உயர்நீதிமன்றம் உத்தரவு
பாம்பே ஐபிஎல் போட்டிகளுக்கு பொழுதுபோக்கு வரி விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கில் மத்திய அமைச்சர் சரத் பவாரையும் பிரதிவாதியாக சேர்க்குமாறு பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு மகாராஷ்டிர அரசு பொழுதுபோக்கு வரி விதிப்பதில்லை. இதை எதிர்த்து பாம்பே உயர்நீதிமன்றத்தில், சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாய் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அமைச்சராக இருக்கும் சரத்பவார், விளையாட்டு அமைப்பில் நிர்வாகியாக இருக்க முடியுமா என்பது குறித்து விளக்குமாறு என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் மஜூம்தார், ஆர்.கே.கேத்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் பவாரையும் ஒரு பிரதிவாதியாக சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications