ஊழல், குடிபோதை- சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு தலைமை காவலர்கள் சஸ்பெண்ட்
புளியங்குடி: ஊழல் மற்றும் பணி நேரத்தில் குடி போதையில் இருந்தது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டரும், 2 தலைமைக் காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புளியங்குடி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பரமசிவன். இவர் மீது பல்வேறு தரப்பிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக எஸ்பிக்கு புகார் வந்தது.
இதே போல் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த முருகன், தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த ராதாரவி ஆகியோர் குடிபோதையில் பணியில் இருந்ததாக எஸ்பிக்கு புகார் வந்தது. இந்த 3 புகார்கள் குறித்து விசாரிக்கும்படி எஸ்பி ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.
விசாரணையில் புகார்கள் உண்மையென தெரிய வந்தது. இதையடுத்து எஸ்பி ஆஸ்ரா கர்க் அவர்கள் மூவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியின் போது சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் குறித்து கண்காணிக்கும்படி எஸ்பிு உத்தரவிட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அங்கு லஞ்ச புகாரில் சிக்கியதை அடுத்து கடந்த வாரத்திற்கு முன்புதான் சொக்கம்பட்டி போலீ்ஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications