தென்காசி அருகே கோஷ்டிக்கலவரம்- அரிவாள் வெட்டு- தடியடி-3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி அருகே அச்சன்புதூரில் ஏற்பட்ட கலவரத்தில் கல்வீச்சில், அரிவாள் வெட்டில் 3 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கலவரகாரர்களை கலைத்தனர்.

தென்காசி அருகே அச்சனபுதூரில் நேற்று முன்தினம் மாடன், மாடத்தி கோயில் கொடை விழா நடந்தது. கொடை விழாவை நடத்தியவர்கள் அதே ஊரில் மற்றொரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். இதற்கு அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் அமைதி படுத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில் நேற்று இரவு இரவு தரப்பினரும் கோஷ்டியாக மோதியுள்ளனர். கல்வீச்சு நடந்துள்ளது. இதில் சிலர் காயமடைந்தனர். வீடு, கடைகள் சேதமடைந்தன.

பெண்கள், குழந்தைகள் அலறி அடித்துகொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆட்டோ ஓன்று அடித்து நொருக்கப்பட்டது. இதையடுத்து அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் மாரியப்பன், சித்திக், இருவரும் கல்வீச்சில் காயமடைந்தனர். காஜா முகைதீன் என்பவர் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இவர்கள் தென்காசி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. கலவரத்தை அடக்க போலீசார் விரைந்து சென்றனர். போலீஸ் எச்சரிக்கை செய்தும் கலவரம் செய்தவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் அச்சன்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை டிஐஜி, எஸ்பி ஆகியோர் நள்ளிரவு முதல் அங்கு முகாமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+