ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் பரபரப்பு – ப.சிதம்பரத்துடன் மோதிய மாவோயிஸ்ட் ஆதரவு மாணவி

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 'Naxalism: A Threat to Indian Democracy and Internal Security' என்ற கருத்தரங்கை காங்கிரஸ் கட்சியின் தேசிய இந்திய மாணவர் யூனியன் ஏற்பாடு செய்திருந்த்து. இதில், ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
அப்போது பல்கலைக்கழக பொருளாதாரத்துறையில் பி.எச்.டி செய்து வரும் விபா என்ற மாணவி எழுந்து, மிஸ்டர் சிதம்பரம், எங்களுக்குப் பேச்சுரிமை வேண்டும் என்று சத்தமாக கூறினார். இதையடுத்து இன்னொரு மாணவியும் விபாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.
இதையடுத்து இருவரையும் போலீஸார் வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்களைத் தடுத்து நிறுத்திய ப.சிதம்பரம், இரு மாணவியரும் முன்வரிசைக்கு வந்து தாராளமாக பேசுமாறு கூறினார்.
இதையடுத்து இருவரும்முன் வரிசைக்கு வந்தனர். பின்னர் விபா பேசுகையில், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஏன் இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள். இந்த நடவடிக்கைகளால் மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் அப்பாவிகளைத்தான் அதிகம் தாக்குகிறார்கள்என்றார் கோபமாக.
அவர் பேசும்வரை அமைதியாக கவனித்த ப.சிதம்பரம் பின்னர் பதிலளிக்கையில், இது முற்றிலும் தவறான புகார். இந்த அதிகாரத்தை நாங்கள் கொடுக்கவில்லை. முன்பிருந்த அரசுதான் கொடுத்தது. இதையும் கூட நீக்கலாமா என்பது குறித்து நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
விபா போன்றவர்கள் ஜனநாயக அரசியலுக்கு வர வேண்டும். ஆயுதப் போராட்டங்களுக்குப் போக கூடாது. மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக விபா போன்றவர்கள் வர நான் உதவத் தயார்.
விபா எனது அலுவலகத்திற்கு வர வேண்டும் என அழைக்கிறேன். டீ சாப்பிட்டுக் கொண்டே நிறைய விவாதிக்கலாம். கூடுதல் விவரங்களையும் அவரால் பெற முடியும் என்றார்.
அவர் இவ்வாறு கூறியதும் விபாவின் முகத்தில் சாந்தமும், திருப்தியும் குடியேறியது. நிகழ்ச்சியின் இறுக்கமும் தளர்ந்தது.
தீவிரவாதிகளை ஒடுக்க தற்போதைய சட்டமே போதும்:
இதற்கிடையே இன்று ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது பேசிய ப.சிதம்பரம், மும்பை தாக்குதல் வழக்கில் கசாப்புக்கு கடுமையான தண்டனை தரப்பட்டிருப்பது, தற்போது உள்ள சட்டங்களைக் கொண்டே தீவிரவாத செயல்களுக்கு கடுமையான தண்டனை தர முடியும் என்பதை நிரூபித்துள்ளது.
இருப்பினும் கடுமையான சட்டங்கள் தேவை என்றால் அதைப் பரிசீலிக்கவும் இந்த அரசு தயாராகவே உள்ளது.
கசாப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கசாப் தண்டிக்கப்படவில்லை. மாறாக ஆணித்தரமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் அவன் தண்டிக்கப்பட்டுள்ளான்.
எனவே திருத்தப்பட்ட சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், கடுமையான தண்டனை பெற்றுத் தர போதுமானதாக உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பாஜக கூறியதைப் போல பொடா போன்ற கடுமையான சட்டம் தேவை என்பது அர்த்தமற்றதாகியுள்ளது.
தற்போதைய சூழலுக்கு தற்போது உள்ள சட்டங்களே போதுமானவை. இந்த சட்டங்களைக் கொண்டு நாம் தீவிரவாத செயல்களை ஒடுக்க முடியுமா என்று பார்ப்போம். முடியாத நிலை ஏற்பட்டால் கடுமையான சட்டங்கள் பக்கம் போகலாம் என்றார்.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications