இது தான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள வேறுபாடு-சுப.வீரபாண்டியன்

அவர் கூறியுள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் இந்தியாவில் நுழைவதற்கு உள்ள தடையை நீக்கி, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத் தமிழகம் வர அவரை அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதன் மூலம், சட்டமன்றத்தில் தான் கூறிய உறுதிமொழியை நம் முதல்வர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.
அத்தோடு நிற்காமல் அவருடைய சிகிச்சைக்கான முழு ஏற்பாடுகளையும் அரசே செய்யும் எனவும், செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
பார்வதி அம்மையார் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பைக் கொடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் முன்வந்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதியையும் துணை முதல்வர் ஸ்டாலினையும் தமிழக அரசையும் திராவிட இயக்க தமிழர் பேரவை நெஞ்சாரப் பாராட்டித் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பிரபாகரனின் பெற்றோர் இந்திய மண்ணில் கால் வைக்கவே அனுமதிக்கக் கூடாது, அவர்களைக் கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், அவர் தமிழகம் வர அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதோடு, அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ள இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டை தமிழின உணர்வாளர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்வோர் இப்போதேனும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications