கைப்பற்றிய பணத்தை திருப்பி கேட்டு செரீனா புது வழக்கு

மதுரை தாசில்தார்நகரைச் சேர்ந்தவர் செரினா பானு. இவருக்கும் மன்னார்குடி வகையாறாவைச் சேர்ந்த தோழியி்ன் கணவருக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வந்ததையடுத்து செரீனா மீதும், அவரது தாயார் ரமீஜா பானு மீதும், இவர்களது கார் டிரைவர் சதீஷ் மீதும் அதிமுக ஆட்சியில் கஞ்சா கேஸ் போடப்பட்டது.
இவர்கள் 30 கிலோ கஞ்சா கடத்தியதாக 2003ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 1.41 கோடி பணம், 21 பவுன் தங்க நகைகள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால், இந்த வழக்கில் 3 பேரையும் மதுரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந் நிலையில் செரீனாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கு வருமான வரி செலுத்தப்படாததால் அதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்த்தில் வருமான வரித்துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, வருமானவரித் துறை சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், செரினா பானுவுக்கு அளிக்க வேண்டிய 1 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயுடன் அதற்கான வட்டித் தொகையை கணக்கிட்டு அந்த மொத்த பணத்தில் இருந்து 97 லட்சத்து 18 ஆயிரத்து 131 ரூபாயை வருமான வரிக்காக எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தை செரினா வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் செரினாவிடம் கைப்பற்றப்பட்ட கார், நகைகள், பாஸ்போர்ட் ஆகியவற்றையும் போலீசார் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையிலும் இதுவரை அந்த பணம் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இதையடுத்து இவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி செரினா சார்பில் அவரது வழக்கறிஞர் கனகராஜ் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications