தலித் சுடுகாட்டை மீட்டுத்தர முதல்வருக்கு சிபிஎம் கோரிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள சோரிஸ்புரம் தலித் மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டை தமிழக முதல்வர் கருணாநிதி மீட்டுத்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். அதன் விவரம் :
தூத்துக்குடி தாலுகா அய்யனடைப்பு ஊராட்சி சோரிஸ்புரம் பகுதியில் 170 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியைச் சேர்ந்த பாளையங்கோட்டை சாலை அருகே உள்ள பக்கிள் ஓடை புறம் போக்கு நிலத்தை கடந்த 75 வருடங்களாக தலித் மக்களின் மயானத்திற்காக சுமார் 1 ஏக்கர் இடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது சோரிஸ் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு தாரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் மயானத்தை ஆக்கிரமித்து, வேலி போட்டு அடைத்துள்ளனர்.
இதனால் மயானமும் அதற்குரிய பாதையும் அடைபட்டு, சோரிஸ்புரம் தலித் மக்கள் மயானம் பறிக்கப்பட்டுள்ள நிலையில் தவிக்கின்றனர். இந்த செயல் சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பானது ஆகும்.
இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இம் மக்கள் புகார் செய்துள்ளனர். ஆனால், இதுவரை இந்த மயானம் மீட்கப்படவில்லை.
எனவே, தாங்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு தலித் மக்கள் பயன்படுத்தம் சுடுகாட்டை மீட்டுத்தருமாறு வேண்டுகின்றேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications