செம்மொழி மாநாட்டில் மடாதிபதிகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்-ராம கோபாலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியின் ஆன்மிகக் கருத்துரைகளை எடுத்து வைக்க துறவிப் பெருமக்கள், மடாதிபதிகளுக்கு மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளில் முக்கியமான நேரத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு மாநில நிதியமைச்சரும் சட்டசபை முன்னவருமான பேராசிரியர் அன்பழகன் கடந்த 9ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சமயம்- ஆன்மீகம் பேசத் தடையில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவரது இந்தக் கருத்து அரசின் கருத்தா, செம்மொழி மாநாட்டுக் குழுவின் கருத்தா அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா என்பதை தெளிவுபடுத்தவில்லை. இருந்தாலும் அமைச்சரின் பேச்சை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.

தமிழ் மொழி வலியுறுத்தும் அற வாழ்வே, சமய வாழ்வாகும். இதற்கு இணை எந்த தேசத்திலும் பார்க்க முடியாது, ஒளவையாரும், வள்ளுவரும், கம்பரும் எடுத்துக் காட்டும் அறம் ஒன்றே.

சங்கத் தமிழ் முதல் இன்றைய கால கட்டம் வரையில் சமயம் சார்ந்தே தமிழ் மொழி என்பது யாராலும் மறுக்க, மறைக்க முடியாதது. அத்தகைய பெருமைமிகு தமிழ் மொழியின் சமயம், ஆன்மீகம் குறித்த கருத்துரைகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் எதிரொலிக்க வேண்டும்.

தமிழக முதல்வர், செம்மொழி மாநாட்டின் குழுத் தலைவர் என்ற முறையில் அவருக்கு இந்தப் பொறுப்பு உள்ளது.

நிதியமைச்சர் சொல்லியது போல மாநாட்டில் தமிழ் மொழியின் சமய- ஆன்மிகக் கருத்துரைகளை ஸ்ரீராம கிருஷ்ண மடம், துறவி பெருமக்கள், கன்னியாகுமரி வெள்ளிமலை சைதன்ய மகராஜ், சின்மயா மிஷன் துறவிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் துறவி பெருமக்கள் தமிழகத்தில் தமிழுக்கும், சமயத்திற்கும் அருந்தொண்டாற்றி வரும் பாரம்பரிய மடாதிபதிகள் துறவி பெருமக்களை, மரியாதையுடன் அழைத்து முக்கிய நிகழ்வுகள் முக்கிய நேரம் அளித்து கருத்துரைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

உண்மையாக தமிழ் மொழி வாழ்வதற்கும், தமிழ் வளர்வதற்கும் அறமே துணை!. இதனைப் போற்றிப் பாதுகாப்பது சமயமும், ஆன்மீகமும் ஆகும்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் தகுந்த ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்று தமிழக பக்தர்கள் சார்பாக இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+