இந்த ஆண்டே கசாப் மரண தண்டனை நிறைவேறும்-மத்திய அரசு

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 6ம் தேதி மும்பை செசன்ஸ் நீதிமன்றம தனக்கு விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து கசாப் மேல்முறையீடு செய்யாவிட்டால் இந்த ஆண்டு இறுதியிலேயே அவரை தூக்கிலிட முடியும்.
அப்சல் குருவின் தூக்கு தண்டனை விவகாரம் மத்திய அரசின் பரிசீலனையில உள்ளது என்றார்.
கசாபின் தூக்கு தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய-பாக் உள்துறை அமைச்சர்கள் கூட்டம்:
இதற்கிடையே இந்திய, பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர்கள் கூட்டம் வரும் ஜூன் 26ம் தேதி நடக்கும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.
சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க ப.சிதம்பரம் இஸ்லாபாத் வரும்போது இந்தச் சந்திப்பு நடக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications