நிதாரி கொலை-சுரீந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை
காஷியாபாத்: நிதாரியில் நடந்த பெண்கள், சிறுமிகளின் 19 கொலைகளில் 2வது கொலை வழக்கி்ல் சுரீந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியை அடுத்த நொய்டா அருகே உள்ள நிதாரி கிராமத்தில் சிறுமிகள், பெண்கள் என 19 பேரை கற்பழித்து கொலை செய்த தொழிலதிபர் மொகிந்தர் சிங் பந்தேர், அவரது வீட்டு வேலைக்காரர் சுரீந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது பங்களாவை ஒட்டியுள்ள சாக்கடையில் பெண்கள், சிறுமிகளின் அழுகிய உடல்கள், எலும்புக் கூடுதல் கிடைத்தன. இவர்களை வீட்டுக்குள் வரவழைத்து கற்பழித்து கொலை செய்து உடல்களை பாதாள சாக்கடையில் வீசி வந்துள்ளனர்.
அவர்கள் மீது உத்தரப் பிரதேச மாநிலம் காஷியாபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
முதல் கட்டமாக சிறுமி ரிம்பா கொலை வழக்கில் மொகிந்தர் சிங், சுரேந்தர் கோலி ஆகிய 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்கில் மொகிந்தர் சி்ங்கை விடுதலை செய்தது.
இந் நிலையில் 7 வயது சிறுமியாந ஆர்த்தியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் சுரீந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தவிர மேலும் 17 கொலை வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாக வேண்டியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications