பார்வதி அம்மாளை அரசுகள் இப்படி வேதனைப்படுத்தலாமா?- விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அன்றைய அதிமுக அரசின் தடை செய்தோர் பட்டியலில் பார்வதி அம்மாள் பெயர் இருந்தது என்றால், அதைத் தெரியாமலேயே மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் அனுமதி வழங்கியது எப்படி?.
இதுகுறித்து தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தாமல், தான் வழங்கிய விசாவை இந்திய அரசே மதிக்க மறுக்கலாமா?.
சிகிச்சைக்கு அனுமதிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு நிபந்தனைகளுடன் அனுமதி கேட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி மத்திய அரசு நிபந்தனை விதித்திருந்தாலும் அவற்றை வெளியில் சொல்லாமல் தளர்த்தியிருக்க முடியும், தமிழக முதல்வர் நினைத்திருந்தால்...
பார்வதி அம்மாளுடைய விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் கையாளும் நடவடிக்கைகள் நம்பத்தகுந்த முறையிலோ, பெருந்தன்மைக்கு உரியதாகவோ இல்லை என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications