மின்சாரம் வழங்குவதில் முறைகேடு - ஸ்பென்சருக்கு எதிராக கடை உரிமையாளர்கள் போராட்டம்

சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் பிளாசா வணிகவளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு கடை பரப்பியுள்ளன.
இந்த நிலையில் ஸ்பென்சரின் 2வது பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். அண்ணாசாலைக்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உடனடியாக விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர்.
அங்கு கடை உரிமையாளர்கள் போராட்டம்நடத்தினர். கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் காமராஜ் இது குறித்துக் கூறுகையில், தமிழக அரசு எங்களுக்காக வழங்கும் மின்சாரத்தை எங்களுக்குத் தராமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கே மோசடியாக கொடுத்து வருகிறது ஸ்பென்சர் நிர்வாகம்.
இதனால் எங்களது கடைகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்படுகிறது. ஏசியைக் கூட போட முடியவில்லை. இதனால் பெருமளவிலான வாடிக்கையாளர்கள் மாறி விட்டனர்.இதனால் எங்களது தொழில் பாதித்துள்ளது. 50 ஆயிரம் ஊழியர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.
இந்தப் போராட்டத்தால் அண்ணா சாலையில் பரபரப்பு நிலவியது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications