அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் பாதுகாப்பு தொழில்நுட்ப ஆணையம் அமைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் பாதுகாப்பு தொழில்நுட்ப ஆணையத்தை மத்தியஅரசுஅமைத்துள்ளது.
பாதுகாப்புத்துறையின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு பெரும் ஊக்கம்அளிக்கும் வகையில் இந்த ஆணையம் அமைக்கப்படுகிறது.
ஆணையத்தின் முக்கியப் பணியாக, 2வது தலைமுறை அர்ஜூன் டாங்குகள் மற்றும் தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணைகளை உருவாக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுப்பதாக அமையும்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் சிதன்ஷு கர் கூறுகையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்த ஆணையத்தின் தலைவராக இருப்பார். இதன் செயலகம், டிஆர்டிஓ தலைமையகத்தில் இடம் பெறும் என்றார்..












Click it and Unblock the Notifications