எத்தனையோ வசவுகள், பாராட்டுகளை சந்தித்த சரித்திரம் என்னுடையது- கருணாநிதி
சென்னை: கடந்த 18 ஆண்டுகால முதல்வர் பதவி காலத்தில், எத்தனையோ வசவுகள், அவற்றை மீறி எழும் வாழ்த்துகள், பாராட்டுகள். இவைகள் அனைத்தையும் சந்தித்த சரித்திரம் தான் என்னுடையது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதம்:
எண்ணிப் பார்க்கிறேன்- "உடன்பிறப்பே'' என்று அழைத்து எத்தனை கடிதங்கள் எழுதிவிட்டேன். காலையில் சட்டப்பேரவையில்; எதிர்க்கட்சி துணைத்தலைவர் (பன்னீர்செல்வம்), "உடன்பிறப்பு'' என்பது எனக்கு ஒரு போர்வை என்று எப்படித்தான் மனம் துணிந்து குறிப்பிட்டாரோ தெரியவில்லை.
ஆம்; இப்படித்தான் சொன்னார்; முதல்வர் முரசொலியில் "உடன்பிறப்பு'' என்ற 'போர்வையில்' எழுதியுள்ள கடிதம் என்றுதான் சொன்னார்.
1969 முதல் 1976 வரை ஏழு ஆண்டுகள்- 1989 முதல் 1991 வரை இரண்டு ஆண்டுகள்- 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள்- இப்போது 2006 முதல் இதுவரை நான்கு ஆண்டுகள் நிறைவு செய்து; மொத்தம் பதினெட்டு ஆண்டுகள் முதல்வராக பணியாற்றி, பத்தொன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஆம்- பதினெட்டு என்பது; வரலாற்றில், புராண இதிகாசங்களில் குறிப்பிடத்தக்க ஒரு எண்ணாகவே இருந்திருக்கிறது.
பாரதப் போர் பதினெட்டு நாட்கள்- ராமாயணப் போர் பதினெட்டு மாதங்கள்- தேவாசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள்- சேரன் செங்குட்டுவன் இமயமலைக் குயிலாலுவத்தில் கனக விசயருடன் நடத்திய போர் பதினெட்டு நாழிகை என்று; பதினெட்டு என்ற எண்ணுக்கு பெருமை சேர்க்கும் புலவர்கள் உண்டு.
என் வாழ்க்கையில் பதினெட்டு என்பது எனக்கு பெருமை சேர்க்காவிடினும்- பதினெட்டை நினைத்து நான் பெருமூச்செறியும் பல சந்தர்ப்பங்களைச் சந்தித்துள்ளேன். அந்த சந்தர்ப்பங்களில் ஒன்றுதான், இன்று சட்டப் பேரவையில் நான் சந்தித்தது.
பதின்மூன்று ஆண்டுகளாக இழுத்துக்கொண்டே போகும் ஒரு வழக்கு (ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு) பற்றியதுதான் நான் "முரசொலி''யில் எழுதியுள்ள கடிதம்.
"உடன்பிறப்பு'' என்பது எனக்கு ஒரு போர்வையாம்- அந்த போர்வையில் நான் புகுந்துகொள்கிறேனாம், பன்னீர் சொல்கிறார்.
"உடன்பிறந்த சகோதரம்'' என்றும், "உடன்பிறவாச் சகோதரம்'' என்றும், நான் போர்வைகளை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்க வேண்டிய தேவையே ஏற்பட்டதில்லை.
ராவணன், கும்பகர்ணனை விளித்தது போலவும்- ராமன், இலக்குவனை விளித்தது போலவும்- "உடன்பிறப்பே'' என்று விளித்திட ஓராயிரம், பத்தாயிரம், லட்சமென உன் போன்ற உடன்பிறப்புகள் எனக்கு இருக்கிறீர்கள்!
நீங்கள் போர்வைகள் அல்லர்- போருக்கு தோள் தட்டும் மறவர்கள்- மானமிகு வீரர்கள் என்பதை அறிந்திருந்தும்- அமைதிக்கு பெயர் போன அருமை நண்பர் பன்னீர்- "பச்சைத் தமிழர்'' என்று பேரவையிலேயே என்னால் அழைக்கப்பட்ட பன்னீர்- அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு- எப்படி ஒரு வார்த்தையை சொன்னார் பார்த்தாயா? போர்வையாம் நீ!. உன்னை கொண்டு மறைத்தவாறு நான் உனக்கும், உலகிற்கும் கடிதம் தீட்டுகிறேனாம்.
கடந்து, நடந்து முடிந்த இந்த பதினெட்டு ஆண்டு காலப் பதவி காலத்தில், எத்தனையோ இத்தகைய வார்த்தைகள், வசவுகள்-அவற்றை மீறி எழும் வாழ்த்துகள்- பாராட்டுகள் அனைத்தையும் சந்தித்த சரித்திரம்தான் என்னுடையது. இதில் பன்னீர் பயன்படுத்திய அந்த "போர்வை''க்காகவா; என்னைப் புலன் மாற்றிப் போட்டுக் கொள்ளப் போகிறேன்?
இளமையில் ரத்தத்துடன் ஊறிய சுயமரியாதைச் சூடும் தணியவில்லை; முதுமையில், "வாழ்க வசவாளர்கள்'' என்று நம் அண்ணா சொன்ன வாசகமும் மறக்கவில்லை.
"வாழ்க வசவாளர்கள்'' என்று வாழ்த்தி இம்மடலை முடிக்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications