உணவில் விஷம் வைத்து கொல்ல சதி என நளினி புகார்-விசாரிக்க குழு அமைப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி இதுதொடர்பாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
கடந்த புதன்கிழமை (21-4-2010) யில் இருந்து புது குற்றவாளி தொகுதியில் இருந்த எல்லா விசாரணை கைதிகளையும் பழைய குற்றவாளி தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.
தற்போது புது குற்றவாளி தொகுதிகள் 2, 3, 4, 5, 7, 8 ஆகியவற்றில் 200 பேர் அடைக்கக்கூடிய இடம் காலியாக உள்ளது. இதில் 6-வது தொகுதியில் நான் மட்டுமே இருக்கிறேன்.
எனக்கு ஏ' வகுப்பு இருப்பதால் ஒரு உதவியாளர் உண்டு. எனக்கு அது மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், புது குற்றவாளி தொகுதியை கடந்த 21-4-2010 முதல் பெருக்கவோ, சுத்தம் செய்யவோ யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த தொகுதிக்கான வார்டர் முதல் தளத்துக்கு வரவோ, அங்குள்ள வேலைகளை செய்யவோ தடை செய்யப்பட்டு உள்ளது.
இது தவிர காலை-மாலை என்று என்னுடனே சமையல் அறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. என் உணவை காப்பாற்ற நான் கடும் முயற்சி செய்தும் பலன் ஒன்றும் இல்லை. இரவில் கே.சி.லட்சுமி என்ற உதவி ஜெயிலர் 27-4-2010 இரவு வருகிறார். இவர்களாக எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து என் தொகுதியில் போட்டு விட்டு என்னை சோதனை செய்து எடுத்ததாக சொல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு என்று கூறியுள்ளார் நளினி.
விசாரணைக் குழு அமைப்பு :
நளினியின் புகாரைத் தொடர்ந்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டிஐஜி தலைமையிலான குழு விசாரணை நடத்தி 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்யும் என அரசு அறிவித்துள்ளது.
நளினியின் புகார்கள் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி சில புகார்களை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கோவை சிறைத்துறை டிஐஜி கோவிந்தரான் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும். இந்தக் குழுவில் பெண் சிறை அதிகாரி ஒருவரும் இடம் பெறுவார் என்று தெரிவித்தார்.
கடந்த மாதமும் தான் சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாக நளினி புகார் கூறியிருந்தார். அவரது அறையிலிருந்து செல்போன, சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications