அரசு கட்டண விகிதத்திற்கு எதிர்ப்பு – பள்ளி நிர்வாகிகள் உண்ணாவிரதம்
நெல்லை: அரசு நிர்ணயித்துள்ள கட்டண விகிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பள்ளிக்கூட நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் ஏற்புடையதாக அல்ல, எனவே கல்விக் கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நெல்லை மாவட்ட மெட்ரிக்குலேஷன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் உண்ணாவிரம் நடைபெறுகிறது. ஆசிரியர்கள் உள்பட 800 பேர் கலந்து கொண்டுள்ள இந்த போராட்டத்துக்கு ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஜெயேந்திரர் தலைமை வகிக்கிறார்.
கோவை பள்ளிகள் ஜூன் 2ல் திறக்கப்படாது
இதற்கிடேயே, தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டண உயர்வை அமல் படுத்த முடியாது என்பதால் பள்ளிக் கூடம் திறப்பதை தள்ளி வைப்பதாக கோவை நர்சரி மற்றும் பநிரமைரி பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்று இவர்கள் அறிவித்துள்ளனர்.
பள்ளிகளை மூடுவோம்
இதற்கிடையே, தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண நிர்ணயம், எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை மீண்டும் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உருவாகும் என்று திருப்பூர் மாவட்ட சுயநிதி பள்ளிகளின் நிர்வாகிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண நிர்ணயம், எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக கட்டணம் அறிவித்துள்ளது தவறானது. அதுவும் வகுப்பு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பள்ளிகளுக்கு முதல் வகுப்பிற்கு அறிவிக்கப்பட்ட தொகையை விட, ஆறாம் வகுப்பிற்கு குறைவாக கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அவசரமாக அறிவித்தது போல் உள்ளது. இதை மீண்டும் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உருவாகும் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications