பிரபாகரனுக்காக சாகவும் தயார்- இயக்குநர் சீமான்
சங்கரன்கோவில் : பிரபாகரனுக்காக எந்த நிமிஷத்திலும் சாகத் தயார் என்று சங்கரன்கோவிலில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசினார்.
நெல்லை வடக்கு மாவட்ட நாம் தமிழர் இயக்க கலந்தாய்வு கூட்டம் சங்கரன்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசியதாவது,
நாம் தமிழர் இயக்கத்தின் மாநாடு 18ல் மதுரையில் நடைபெறுகிறது. நான் பேச்சாளனோ, கருத்தாளனோ, எழுத்தாளனோ இல்லை. நான் ஒரு உணர்வாளன். அவ்வளவுதான். நான் பணக்காரன் இல்லை. ஒரு தமிழன் அது போதும் எனக்கு.
பிரபாகரனுக்காக எந்த நிமிஷத்திலும் மரணத்தை சந்திக்கவும் தயாராகதான் இங்கு வந்து இருக்கிறேன். தமிழனாக பிறந்த எவனும் யாரிடமும் கைகட்டி நிற்காது, காலில் விழாது இருக்க வேண்டும். குற்றங்களை சுட்டி காட்டதான் நமக்கு கைகள் இருக்கிறது. மனிதன் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும்.
நான் சிறையில் இருந்தபோதே என்னை தேர்தலில் போட்டியிட வைக்க அணுகாத கட்சிகளே இல்லை. பிரபாகரனின் தம்பியாக இருந்து போராடுவதே எங்களின் லட்சியம்.
நாட்டில் எந்த கட்சியும் சரியில்லை. உலகத்தில் எந்த இனத்திற்கும் ஏற்படாத கொடுமை என் தமிழனத்திற்கு ஏற்பட்டு இருக்கிறது. தமிழன் என்று தன்னை இந்தியன் என்று கருதினானோ அன்றே தமிழினம் செத்து விட்டது. நாம் இந்தியர்கள் இல்லை. நாம் தமிழர்கள் என்ற உணர்வு இருக்க வேண்டும்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவை திராவிட நாடு என்றால் தமிழகத்தில் இத்தனை திராவிட அமைப்புகள் இருந்தும் மற்ற மாநிலங்களில் ஒரு திராவிட அமைப்பு கூட இல்லையே ஏன்...
தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் நாங்கள்தான் ஆளுவோம். பிரபாகரன் இருந்த இடத்தில் நான் இருந்திருந்தால் உலக பயங்கரவாதியாக மாறியிருப்பேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications