கருணாநிதி அளித்த விருந்துபசாரம் – அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு
சென்னை : சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைவதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்துக் கெளரவித்தார். இதில் வழக்கம் போல அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடையும்போது எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்துக் கெளரவிப்பது வழக்கம்.
நடப்பு பட்ஜெட் கூட்டத் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்துக் கெளரவித்தார்.
இதில் சபாநாயகர் ஆவுடையப்பன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பன், கவிஞர் கனிமொழி, காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், சுதர்சனம் உள்ளிட்டோர், பாமக சார்பில் ஜி.கே.மணி உள்ளிட்டோர், சிபிஐ சார்பில் சிவபுண்ணியம் உள்ளிட்டோர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. ரவிக்குமார், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, போலீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த விருந்துபசார நிகழ்ச்சியில் வழக்கம் போல அதிமுக, மதிமுக, தேமுதிக கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விருந்தைப் புறக்கணித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications