கட்டபொம்மன் விழாவில் கலாட்டா - டிஎஸ்பிக்கு கத்தி குத்து !
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடைபெற்ற கட்டபொம்மன் விழாவில் கலவரம் ஏற்பட்டது. மர்ம நபர்கள் போலீஸ் டிஎஸ்பி -யை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை உள்ளது. இங்கு கட்டபொம்மன் குல தெய்வமான வீரசக்க தேவி ஆலய 54 வது வழிபாட்டு விழா, கட்டபொம்மன் விழா ஆகியன நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.
இதனைமுன்னிட்டு, கீழவேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து கட்டபொம்மன் நினைவு ஜோதி கொண்டு செல்லப்பட்டது.
அப்போது சென்ற வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர்.
இதில் பல வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
இதனால், ஆத்திரமடைந்த ஜோதி கொண்டு சென்றவர்கள், மதுரை - தூத்துக்குடி சாலையில் திடீர் மறியல் செய்தனர். மேலும் கற்களை வீசியதில் அந்த வழியாக வந்த ஒரு பஸ் கண்ணாடி உடைந்தது.
விளாத்திகுளம் டி.எஸ்.பி. லயேலா இக்னேஷியஸ் ஜீப் கல்வீசி தாக்கப்பட்டது.
அப்போது, ஏ.டி.எஸ்.பி.மார்ஸ்டன் லியோ, மற்றும் ஏட்டுக்கள் படு காயமடைந்தனர். மேலும், டிஎஸ்பி லயேலா இக்னேஷியஸ்- ஐ மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கட்டபொம்மன் கோட்டையில் நடந்த அரசு விழாவில் தூத்துக்குடி கலெக்டர் கோ. பிரகாஷ், திமுக, எம்.பி. ஜெயதுரை, கட்டபொம்மன் வாரிசுகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முவுவதும் பதட்டம் நிலவுவதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications