நளினியை புழல் மத்திய சிறைக்கு மாற்ற டிஐஜி கமிட்டி பரிந்துரை

உணவில் விஷம் வைத்து தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக நளினி கூறிய புகார் குறித்து விசாரணை நடத்திய சிறைத்துறை டிஜிபி இந்திராஜ் தலைமையிலான கமிட்டி, தமிழக அரசிடம் இன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், நளினியை புழல் மத்திய சிறைக்கு மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் நளினி தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஜெயில் அலுவலர்கள் உணவில் விஷம் கலந்து தன்னைக் கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஷியாம் சுந்தருக்கு கடிதம் அனுப்பினார்.
எனவே தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதையடு்த்து இது குறித்து விசாரிக்க சிறைத்துறை டி.ஐ.ஜி. தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் பெண் அதிகாரியும இடம் பெற்றார். இந்தக் கமிட்டி விசாரணை நடத்தி இன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நளினியை புழல் மத்திய சிறைக்கு மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், தான் சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாக நளினி புகார் கூறியிருந்தார். அவரது அறையிலிருந்து செல்போன, சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நளினியை தற்கொலை செய்ய தூண்டுகிறார்கள்-முருகன்:
இந் நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியின் கணவர் முருகன் சிறைத்துறை ஏடிஜிபி ஷியாம் சுந்தருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சிறைத்துறையினர் என் மனைவி நளினியை தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications