தேர்தல் ஆணைய பணிகளில் தலையிடவில்லை- குப்தாவுக்கு தமிழக அரசு பதில்
சென்னை: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் தலையிடவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமேலவை அமைப்பு பணிகளுக்காக, தேர்தல் ஆணையத்துடன் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்புப் பணி அதிகாரியாக ஜமாலுதீன் நியமிக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவை சட்டமன்ற செயலாளர் செல்வராஜ் கடந்த 15ம் தேதி பிறப்பித்தார். இந்த நியமனம் தொடர்பாக தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும், இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் தமிழக அரசு தலையிடுவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் அவர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டமன்ற செயலாளர் செல்வராஜ் கூறுகையில்,
மேலவைத் தேர்தலுக்காக, பொது (தேர்தல்) துறையுடன், ஒருங்கிணைப்பு பணிகளில் மட்டுமே சிறப்பு பணி அலுவலர் ஈடுபடுவார். அவர் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் குறுக்கிட மாட்டார். தேர்தல் நடத்துவது மற்றும் தொகுதி சீரமைப்பு போன்றவை தேர்தல் ஆணையம்தான் மேற்கொள்ளும்.
இதற்காக, தமிழகத்தின் பல்வேறு துறைகளை பற்றிய தகவல்களை தேர்தல் ஆணையம் கேட்கும். தேர்தல் ஆணையத்தினர் கேட்கும் தகவல்கள் அனைத்தையும், சம்பந்தப்பட்ட துறைகளிடம் கேட்டு பெற்று தரவேண்டியது அவசியம். இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் சிறப்பு பணி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் குறுக்கிடும் நோக்கத்தில் அமைந்ததல்ல.
மேலவைப் பணிகளுக்காக சிறப்புப் பணி அலுவலருக்கு உதவ துணைச் செயலாளர், சட்டப்பேரவை நிருபர்கள் சிலர், ஓட்டுனர், உதவியாளர் போன்றோர் சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து விரைவில் நியமிக்கப்படுவர். சட்டமன்ற வளாகத்தில், சிறப்பு பணி அலுவலருக்கு தனி அறை தயாராகி வருகிறது. மேலவை அமைக்கப்பட்டதும், அதற்கு தனியாக செயலாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications