வாக்காளர் பட்டியலில் இருந்து ​12.35 லட்சம் பேரை நீக்க நடவடிக்கை-நரேஷ் குப்தா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து ​12.35 லட்சம் பேரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு்ள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு,​​ நீக்கல் மற்றும் திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான கள ஆய்வுப் பணிகளை வாக்குச் சாவடி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு தமிழகம் முழுவதும் 46.16 லட்சம் பேர் தகுதியானவர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர்.​ அதில்,​​ பெயர்களைச் சேர்ப்பதற்கான படிவங்கள் 32.74 லட்சம் பேரிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

16.82 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் கூடுதலாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.​ அவற்றில்,​​ 12.35 லட்சம் பேருக்கு அவர்களுடைய பெயர்களை நீக்குவதற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.​

பட்டியலில் பெயர்,​​ முகவரி உள்ளிட்ட விவரங்களை திருத்துவதற்கு 8.9 லட்சம் பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.​ அதில்,​​ திருத்தம் செய்வதற்கான படிவங்கள் 5.64 லட்சம் பேரிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியல் ஜூலை 1ம் தேதி வெளியிடப்படும்.​ அதற்கு முன்னதாக,​​ வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு,​​ முகவரியை மாற்றுவது போன்றவற்றுக்கான படிவங்களை விரைந்து பெற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ராஜ்யசபா தேர்தல் பார்வையாளர் நானே:

தமிழகத்தில் ஜூன் 17ம் தேதி ராஜ்யசபா எம்பி தேர்தல் நடைபெறவுள்ளது.​ இதற்கான,​​ வேட்புமனு தாக்கல்,​​ வேட்பு மனுக்கள் பரிசீலனை,​​ வாக்குப் பதிவு,​​ வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளை பார்வையிடும் அதிகாரியாக நானே நியமிக்கப்பட்டுள்ளேன் என்றார்.

எதிரிகளுக்கும் உபசாரம்:

நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கு மட்டும் செய்தியை தருகிறீர்களே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு பதிலளித்த குப்தா,

எதிரிகளாக இருந்தால் கூட அவர்களை அனுசரித்துப் போகவேண்டும் என்பதுதான் முறை. கோட்டைக்கு வழக்கமாக வரும் நிருபர்கள், செய்தி சேகரிப்பதற்காக கோட்டையை சுற்றி வரும்போது, 'தலைமை தேர்தல் அதிகாரி' என்ற ''சிறிய'' பெயர்ப் பலகையும் அவர்கள் கண்ணில் படுகிறது.

அப்போது, அனுமதியுடன் உள்ளே வருகிறார்கள். என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அதற்கு பதில் சொல்கிறேன். நானாக எதுவும் சொல்வதில்லை. சொல்லாவிட்டால், தகவல் அறியும் சட்டம் என ஒன்று இருக்கிறதே என்பார்கள். கேள்வி கேட்டால்தான் பதில் கிடைக்கும் என்றார்.

மேலவைக்கு ஜனாதிபதி ஒப்புதல்:

இந் நிலையில் தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் சட்ட மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மத்திய அரசின் கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+