வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ... பினாங்கு துணை முதல்வர் பேச்சு
மதுரை: தமிழகத்தில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட்டால் தான் வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ முடியும் என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறினார்.
மதுரையில் நடந்த நாம் தமிழர் கட்சி மாநாட்டில் அவர் பேசுகையில்,
அதிகாரத்தை பயன்படுத்தியே தமிழர்களின் தலையெழுத்தை மாற்ற முடியும். மலேசியாவில் வரும் தேர்தலில் மத்திய ஆட்சியை நாங்கள் சார்ந்த கட்சி கைப்பற்றினால், தமிழ் இனத்துக்கு அங்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும்.
அரசியல் மூலம் உலகத் தமிழர் நிலையை மேம்படச் செய்ய முதலில் தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என என்னை நிர்பந்தித்தனர்.
தமிழக மக்களுக்கு சரியான தலைமை தேவை. அப்போதுதான் உரிய மாற்றம் கொண்டுவர முடியும். உலக அளவில் எங்கேனும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், தமிழக மக்கள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை முன்பு இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை தற்போது போய்விட்டது.
மலேசியா, மொரீஷியஸ் என்றாலும் தமிழர்களுக்கு அரசியல் மறுமலர்ச்சி தேவை. அங்கு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் முதலில் தமிழகத்தில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். அப்போதுதான் வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ முடியும்.
இலங்கை போர் குறித்து அந்நாட்டு அதிபரை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் 75 பேர் மலேசியாவில் தவித்து வருகின்றனர். அவர்களை சந்திக்க எனக்குக்கூட முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நான் சந்தித்தேன்.
தற்போது அவர்களை இந்தோனேசியாவில் தங்கவைக்க பேச்சு நடத்தி வருகிறேன். அங்கு தங்க வைக்க அந்நாட்டு அரசு சம்மதித்துள்ளது. எனினும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் இடமளிக்க முதல்வர் கருணாநிதி முன் வரவேண்டும் என்றார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் படம்:
இந்தப் பொதுக் கூட்ட மேடையின் பின்புறம் உலக அளவிலான மற்றும் தமிழக தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது. சந்தனக் கடத்தல் வீரப்பன் படமும் இடம் பெற்றிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications