3 ரயில்களில் குண்டுவெடிப்பு-குணங்குடி ஹனீபா உள்பட 8 பேர் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: 3 ரயில்களில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
1997ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி சேரன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 18 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குணங்குடி ஹனீபா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந் நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications