ராஜீவ் காந்தி 19வது ஆண்டு நினைவு தினம்- நினைவிடத்தில் அஞ்சலி
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி இரவு தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
இன்று ராஜீவ் காந்தியின் 19வது நினைவு தி்னமாகும். இதையொட்டி இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் உள்ள ராஜீவ் காந்தி படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் மலர் அஞ்சலிசெலுத்தப்பட்டது. ரத்ததான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணிக்கு சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு, தங்கபாலு மாலை அணிவித்தார்.9.30 மணிக்கு ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
டெல்லியில் உள்ள ராஜீ்வ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் தலைமையில் உறுதிமொழி:
ராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று கொடுஞ் செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு முதல்வர்
கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் முதல்வர் தலைமையில் அரசு ஊழியர்கள் கொடுஞ்செயல் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
அந்த உறுதிமொழி வருமாறு:
''அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ் செயல்களையும், வன்முறைகயும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும் நாம் உறுதி கூறுகிறோம்''.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications