நாடு கடந்த தமிழீழ அரசு உருவாகியதால் பீதி-சிதைக்க இலங்கை அரசு தீவிரம்
கொழும்பு: எங்கே வரப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தடாலடியாக உருவாகி விட்டதால் பீதியடைந்துள்ள இலங்கை அரசு அதை குலைக்கவும், சிதைக்கவும் களம் இறங்கியுள்ளதாம்.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தற்போது ஒரு மையப் புள்ளி கிடைத்துள்ளது. அதுதான் நாடு கடந்த தமிழீழ அரசு. இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள், வாதங்கள், பிரதிவாதங்கள், கருத்து பேதங்கள் இருந்தாலும் ஈழத் தமிழர்களின் குரலாக இதுதான் இனி சர்வதேச அரங்கில் ஒலிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்றாகியுள்ளது.
இலங்கைக்கு எதிராக, அதன் இனவாதத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசின் மூலம் குரல் கொடுக்கப் போகின்றனர் ஈழத் தமிழர்கள். இதன் தலைவராக ருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் சுதந்திரம் பிரகடனம் செய்யப்பட்ட பிலடெல்பியா நகரில், சுதந்திர சதுக்க அரங்கில் 2 நாட்கள் நடத்தப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசின் மாநாடு பல்வேறு நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் இலங்கை அரசு பீதியடைந்துள்ளது.
தற்போது இந்த நாடு கடந்த தமிழீழ அரசின் மூலம் இலங்கையின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி, தூதரக ரீதியில், அந்தநாட்டுக்கு நெருக்கடி தர தமிழீழ அரசு களம் இறங்கியுள்ளது.
சட்டபூர்வமான முறையில் இந்த அரசு அமைப்பு உருவாகியிருப்பதால் நிச்சயம் இதை மேற்கத்திய நாடுகள் புறக்கணிக்கும் வாய்ப்பில்லை. சட்ட ரீதியாக, இலங்கைக்கு நெருக்குதல்களைக் கொடுத்து ஈழத்தில் புழுவாய் மாற்றப்பட்டு துடித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்குரிய உரிமைகளையும்,சலுகைகளையும் பெற்றுத் தரும் முக்கியக் கடமையை இந்த நாடு கடந்த தமிழீழ அரசு மேற்கொள்ளவுள்ளது.
இந்த அரசால் தனக்கு பெரும் நெருக்குதல்கள் வரும் என பயந்து போயுள்ள இலங்கை அரசு இதன் முயற்சிகளைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் தேவையானவற்றை செய்யுமாறு உலகம் முழுவதும் உள்ள தனது தூதரகங்களை இலங்கை அரசு முடுக்கி விட்டுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications