லைலா புயலால் மாற்றம்- கேரளாவுக்குப் பதில் தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கும்
Subscribe to Oneindia Tamil

லைலா புயல் பல மாற்றங்களுக்கு வித்திட்டு விட்டது. அது பலவீனமடைந்து விட்டாலும், தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிப்பதால், தென் மேற்குப் பருவ மழையிலும் மாற்றம் வந்துள்ளது.
வழக்கமாக கேரளாவில்தான் இது தொடங்கும். ஆனால் லைலா எதிரொலியாக இந்த ஆண்டு தமிழகத்தில் மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானியல் ஆய்வு மைய வட்டாரத்தில் தெரிவிக்கையில், தென் மேற்குப் பருவ மழை மேலும் முன் கூட்டியே தொடங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. குமரிக் கடல் பகுதியில் பல பகுதிகளில் மழைக்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளன.
முதலில் இது தமிழகத்தில் தொடங்கும். அரபிக் கடலை விட வங்கக் கடலில் மழைக்கான அறிகுறிகள் தீவிரமாக இருப்பதால் இந்த மாற்றம் என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications