மங்களூர் விமான விபத்து- கருணாநிதி, ஜெ., பர்னாலா இரங்கல்
சென்னை: மங்களூரில் நடந்த ஏர்இந்தியா விமான விபத்தில் 158 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொது ச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் அதிர்ச்சியும், இரங்கலும் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து் ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாய் மங்களூர் இடையே செல்லும் ஏர் இந்தியா விமானம், மங்களூரில் விபத்துக்கு உள்ளாகி பல உயிர்களை பலி கொண்ட சம்பவத்தைக் கேட்டு கடுமையான அதிர்ச்சியையும் வேதனையையும் அடைந்தேன்.
அந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் கூறிக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில்,
துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் சுமார் 158 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உயிரிழந்த துயரச்செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற விபத்து இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை தேவை. விபத்துக்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
மங்களூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 158 பேர் பலியான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications