லைலா புயலால் ஒரிசாவில் உப்பு உற்பத்தி பாதிப்பு
பெர்ஹாம்பூர் (ஒரிசா): லைலா புயலால் ஒரிசாவில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
லைலா புயல் காரணமாக பெய்து வரும் கன மழையால்தான் இந்த நிலைமையாம். ஒரிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் லைலா புயலால் வியாழக்கிழமை முதல் அங்கு பெய்து வரும் கன மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெருமளவிலான உப்பு கரைந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து உப்பு கூட்டுறவு சங்க செயலாளர் துரியோதன் ரெட்டி கூறுகையில், உப்பு உற்பத்தி 50 சதவீத அளவுக்கு குறைந்து போயுள்ளது. உற்பத்தியும் கடந்த நான்கு நாட்களாக நின்று விட்டது.
இப்பகுதியில் பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து ஜூன் 15ம் தேதி வரைதான் உப்பு உற்பத்திக் காலமாகும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையும், தற்போது லைலா புயலால் பெய்து வரும் மழையும் உப்பு உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications