விபத்துக்குள்ளான ஏர் இந்தியா வி்மான பைலட் 10,000 மணி நேரம் பறந்த அனுபவசாலி

55 வயதான குளுசிகா, செர்பியாவைச் சேர்ந்தவர். ஆனால், இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். 10,000 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். அவருடன் இணை பைலட்டாக பயணித்தவர் எச்.எல்.அலுவாலியா.
மங்களூர் குறித்து நன்கு அறிந்தவர் குளுசிகா. மங்களூர் விமான நிலையத்தில் மொத்தம் 19 முறை விமானத்தை தரையிறக்கிய அனுபவம் பெற்றவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக குளுசிகா இந்தியாவில் விமானம் ஓட்டி வந்தார்.
அலுவாலியா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விமான ஓட்டியாக செயல்பட்டு வந்தார். இதுவரை 3750 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர். மங்களூர் விமான நிலையத்தில் இவர் இதுவரை 66 முறை விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
குளுசிகாவும் சரி, அலுவாலியாவும் சரி விமானத்தை தரையிறக்குவதில் பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கவில்லை. மேலும் எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டதாகவும் அவர்கள் வான் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தரவில்லை.
மங்களூர் விமான நிலைய ரன் வே ஒரு டேபிள் டாப் ரன்வே ஆகும், அதாவது கையடக்கமான ரன்வே. இதுபோன்ற ரன்வேக்களில் விமானத்தை டேக் ஆப் செய்வதும், இறக்குவதும் சற்று சவாலானது. குறிப்பாக மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தைத் தரக் கூடியது.
பாஜ்பா பகுதியின் மலை உச்சியில் இந்த ரன்வே அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் வனம் சூழ்ந்த பகுதியில் இது அமைந்துள்ளது. நாட்டின் மிகவும் அபாயகரமான ஏர்போர்ட் என்று வர்ணிக்கப்பட்டாலும் கூட எப்போதும் இந்த ஏர்போர்ட் நிரம்பி வழியும்.
கர்நாடக மாநிலத்தின் மங்களூர், உடுப்பி, கனரா உள்ளிட்ட பகுதி மக்களுக்கும், கேரளாவின் காசர்கோடு, கண்ணூர் பகுதி மக்களுக்கும் இந்த விமான நிலையம் பெரும் வரப் பிரசாதமாக இருந்ததே இந்த அளவுக்கு பயணிகள் அதிகம் வரக் காரணம்.
கடந்த 2006ம் ஆண்டு பாஜ்பே விமான நிலைய ரன்வே 8000 அடியாக நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இதுவரை 32,000 விமான தரையிறங்கல்கள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
நேற்றைய சம்பவத்திலும் கூட விமானம் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல்தான் தரையிறங்கியுள்ளது. ஆனால் அடுத்த சில விநாடிகளில்தான் ஏதோ நடந்து விமானம் வேகமாக ஓடி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணமாக பல அம்சங்கள் கூறப்பட்டாலும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே அதுகுறித்த தெளிவு ஏற்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications