கசாப்பிடம் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது - 60 நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம்
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கசாப்பிடம் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டுள்ளது. அவன் 60 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து பாம்பே உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்.
சிறை அதிகாரிகள் தீர்ப்பின் நகலை கசாப்பிடம் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட கசாப், நகலை தனது அறையிலேயே வைத்துள்ளான்.
தீர்ப்பின் நகலைப் பெற்ற 60 நாட்களுக்குள் அதை எதிர்த்து அப்பீல் செய்யலாம் என்பது சிறை விதியாகும். தற்போதைய சூழ்நிலைப்படி கசாப்புக்கு வக்கீல் கூட தேவைப்படாது. அப்பீல் செய்ய விரும்புவதாக சிறை அதிகாரிகளுக்கு கசாப் எழுத்துமூலமாக தெரிவித்தால் போதும்.
அந்த கடிதத்தை பாம்பே உயர்நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகளே முறைப்படி சமர்ப்பிப்பார்கள். பின்னர் இந்த அப்பீல் மனுவை உயர்நீதிமன்றம் விசாரிக்கும். அதன் பின்னர் தனது விருப்பத்திற்கேற்றார் போல வக்கீலை கசாப் தேர்வு செய்யலாம். அவனால் வக்கீலை தேர்வு செய்ய முடியாமல் போனால், நீதிமன்றமே வக்கீலை தேர்வு செய்து தரும்.
பின்னர் தீர்ப்பின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும். இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கும்.
அதேபோல, இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பாஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பும் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications