பணகுடி அருகே விபத்து: திருமண கோஷ்டியினர் 11 பேர் பலி

நாகர்கோவில் கோட்டாறு வட்டவிளை பழைய ராஜேஸ்பிள்ளை கம்பவுண்ட்டை சேர்ந்த சவுதர் மற்றும் அவரது உறவினர்கள் 22 பேர் ஒரு வேனில் நெல்லை தென்பத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நேற்று இரவு அனைவரும் விருந்து முடிந்து ஊர் திரும்பினர். நாகர்கோவில் பரப்புவிளையை சேர்ந்த டிரைவர் விக்னேஷ் வேனை ஓட்டினார்.
இரவு 9-30 மணிக்கு நெல்லை மாவட்ட எல்லையான பணகுடி அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் வேன் சென்றபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் சென்ற கேபின் நிறுவன ஆம்னி பஸ் வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதின. இதில் வேன் பகுதி நொறுங்கி முற்றிலும் உருத் தெரியாமல் போனது. இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானார்கள். ஒருவர் மருத்துவமனையில் பலியானார்.
அவர்கள் விபரம்:
1.சொக்கலிங்கம், ஆம்னி பஸ் டிரைவர், 2.விக்னேஷ், வேன் டிரைவர், 3.லலிதா, வைத்தியநாதபுரம், 4. ஜெயா, 5. இவரது மகள் சுதா, 6.நிஷா, 7. இவரது மகள் ரஷியா, உள்பட 11 பேர் பலியாகி விட்டனர்.
காயமடைந்தவர்கள் விபரம் வருமாறு,
சந்தியா, ரகுமான், டவியா ஜாஸ்மின், மாஹின், இவர்கள் 4 பேரும் வட்டவிளையை சேர்ந்தவர்கள். சாருதா உத்திரங்கோடு மற்றும் பாத்திமா, ஷோபியா உள்பட 14 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications