ராஜ்யசபா தேர்தல்-கம்யூனி்ஸ்ட்கள் ஆதரவை கோரும் ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 6 எம்பிக்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது.

ஒரு எம்.பியை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்களின் ஓட்டுதேவை. இப்போது அதிமுகவிட் 57 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சியான ம.தி.மு.கவிடம் 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2 எம்பிக்களைத் தேர்வு செய்ய வேண்டுமானால் அதிமுகவுக்கு 68 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை ஜெயலலிதா நாடியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் 9 எம்.எல்.ஏக்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் 6 எம்.எல்.ஏக்களும், உள்ளனர்.

இந்தக் கட்சிகளின் ஆதரவு இருந்தால் தான் அதிமுக சார்பில் 2 எம்பிக்களைத் தேர்வு செய்ய முடியும்.

இந் நிலையில் இரு கட்சிகளின் ஆதரவையும் கோரி ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இத் தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது. அதில் ராஜ்யசபா தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+