தன்டேவாடா..தொலைந்த வயர்லெஸ்ஸால் பலியான 76 சிஆர்பிஎப் வீரர்கள்!

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 76 மத்திய ரிசர்வ் போலீஸ படையினர் கொல்லப்பட காரணமாக இருந்த நக்ஸலைட்டுகளில் 5 பேரும் அவர்களின் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டீஸ்கர் மாநிலம் தன்டேவாடாவில் கடந்த மாதம் இந்த பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

இந் நிலையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை தான்டேவாடா காவல்துறை எஸ்பி அம்ரிஷ் மிஸ்ரா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கைதானவர்களில் நக்சலைட் இயக்கத்தின் தளபதியான பர்ச லக்மா என்பவரும் அடக்கம்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிஆர்பிஎப் படையின் 62வது பட்டாலியனைச் சேர்ந்த துணை கமாண்டர் ஒருவரின் வயர்லெஸ் நக்ஸல்கள் கைப்பற்றியதாகவும், அதன்மூலம் சிஆர்பிஎப் படையின் நடமாட்டததை தாங்கள் துல்லியமாகக் கண்காணித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.

சம்பவத்தன்று அதிகாலை 3 மணிக்கு அந்த வயர்லெஸை தேடும் பணியில் உடனடியாக ஈடுபடுமாறு அதிகாரிகள் சிஆர்பிஎப் படையினருக்கு உத்தரவிட்டதாகவும், அந்த தகவலை வைத்தே அவர்களை சுற்றி வளைத்துத் தாக்கியதாகவும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+