அமெரிக்கன் சென்டர் தாக்குதல்-அன்சாரியின் தூக்கு தண்டனை நிறுத்தம்

கொல்கத்தாவில் அமெரிக்கன் சென்டர் மீது 2002ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆப்தாப் அகமத் அன்சாரி, ஜமாலுதீன் நசிர் உள்ளிட்ட 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த அன்சாரி துபாய்க்கு தப்பினார். அவரை துபாய் போலீசார் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அன்சாரி, ஜமாலுதீன் நசிர் உள்ளிட்ட 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. ஷகீல் மாலிக், திலிப் குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரி்த்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அன்சாரி, ஜமாலுதீன் நசிர் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மற்ற 5 பேரின் தண்டனையும் குறைக்கப்பட்டது.
இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து அன்சாரி, ஜமாலுதீன் நசிர் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் கடந்த 11ம் தேதி ஜமாலுதீன் நசிர் மீதான தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தது.
அன்சாரி மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சிங்வி, பிரசாத் தலைமையிலான பெஞ்சு இன்று அன்சாரியின் தூக்கு தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அன்சாரியின் அப்பீல் மனு தொடர்பாக 4 மாதங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications