கள்ளத் தொடர்பு விவகாரத்தில் அதிமுக பிரமுகர் படுகொலை
சென்னை: சென்னையில் கள்ளத் தொடர்பு விவகாரத்தில் அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார்.
கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி அவ்வை நகரைச் சேர்ந்த காமராஜ் (48), புரசைவாக்கம் பகுதி 62வது வட்ட அதிமுக துணைச் செயலாளராக இருந்து வந்தார்.
நேற்றிரவு கொளத்தூர் மெயின் ரோடு சந்திப்பில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் காமராஜை சுற்றி வளைத்து பட்டா கத்திகளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
இதில் காமராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார்.
இது தொடர்பாக கொளத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், காமராஜ் திருமணம் செய்யாமலேயே ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இந் நிலையில் அந்தப் பெண்ணைவிட்டுவிட்டு சமீபத்தில் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த லில்லி என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்நது வந்துள்ளார்.
இதற்கு லில்லியின் 2 மகன்கள் எதிர்ப்பு தெரிவித்தும் காமராஜ் கண்டுகொள்ளாததால் அவர்களே தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து காமராஜை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் லில்லியின் 2 மகன்கள் உள்பட 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications