ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது

ஸ்ரீகாளஹஸ்தி ஞானப்ரகசாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் ராஜகோபுரம் 122 அடி உயரம் கொண்டது.
இந்தக் கோவில் 1516ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. பஞ்சபூத தலங்களில் இக்கோவில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோவிலாகத் திகழ்கிறது.
இதன் ராஜகோபுரத்தில் கடந்த 1988ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால் கோபுர சிற்பங்கள் உடைந்து விழுந்தன. சேதமடைந்த ராஜகோபுரம் ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
இந் நிலையில் இப்போது மீண்டும் ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு, அது விரிவடைந்து கொண்டே போய் கடந்த சில நாட்களில் இரண்டாக பிளந்து விட்டது.
சென்னை குழு விரைந்தது:
இது குறித்து தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட கலெக்டர் ராஜகோபுரத்தை பார்வையிட்டார்.
கோபுரத்தை சுற்றி 500 அடி பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்தை சுற்றி கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பேராசிரியர் நரசிம்ம ராவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்து ராஜகோபுரத்தை ஆய்வு செய்தனர். ராஜகோபுரத்தில் இருந்து விழுந்த சிற்பங்களின் பகுதிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.
இதுகுறித்து நரசிம்ம ராவ் கூறுகையில்,
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் அடித்தளம் பலமாக உள்ளது. ஆனால், கோபுர கற்கள் பலவீனமாக உள்ளன. காற்று, மழை போன்ற இயற்கை பருவநிலை காரணமாக ராஜகோபுரம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலை உள்ளது.
ராஜகோபுரத்தின் கட்டுமான கற்களின் ஒரு சிறிய பகுதியை எடுத்துச்செல்கிறோம். அந்த கற்களை சோதனை செய்தபிறகு இன்னும் ஒரு வாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications