முத்துசாமிக்கு என்ன மனக்குறை என்று எனக்கு தெரியாது-ஜெயலலிதா

எம்ஜிஆர் விசுவாசிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துசாமி திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார்.
மிகச் சிறந்த நிர்வாகியான முத்துசாமியை ஜெயலலிதா நீண்ட காலமாகவே ஒதுக்கி வைத்துள்ளதையடுத்து அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
இந் நிலையில் இன்று சென்னையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி தொகைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயலலிதா நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு அதிமுகவில் மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அவர் திமுகவில் இணையப் போவதாகவும் செய்திகள் வெளிவருகின்றனவே என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய மக்கள் இயக்கம். இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தில் ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அத்தனைப் பேருக்கும் நான் பொதுச் செயலாளர்.
ஆகவே இவ்வளவு பெரிய மக்கள் இயக்கத்திற்கு, ஒரு மாபெரும் அரசியல் கட்சிக்குத் தலைவர் என்கிற முறையில் என்னுடைய பொறுப்பு மிகப் பெரியது. என்னுடைய கடமையும் மிகப் பெரியது.
கழக உறுப்பினர்கள் யாருக்காவது, மனக்குறை இருக்குமானால், அவர்கள் எப்போது விரும்பினாலும், என்னை சந்திக்கலாம். தங்களுக்குள்ள மனக்குறையைப் பற்றி என்னிடம் மனம் விட்டுப் பேசலாம்.
பேச்சுவார்த்தை மூலம் நிச்சயமாக தீர்வு காண முடியும். முன்னாள் அமைச்சர் முத்துசாமியை பொருத்த வரையில் அவருக்கு என்ன மனக்குறை இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் எதுவாக இருந்தாலும், முத்துசாமி அவர்கள் எப்போது விரும்பினாலும் என்னை சந்திக்கலாம்.
அவருக்கு என்ன பிரச்சனையோ அதைப்பற்றி என்னிடம் பேசலாம். நிச்சயமாக அதற்கு தீர்வு காணலாம் என்று நம்புகிறேன்.
என்னைப் பொருத்தவரை ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் கொண்ட இந்த இயக்கத்திற்கு பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் ஒரு உறுப்பினரைக் கூட இழக்க விரும்பவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications