ஸ்டாலினை புறக்கணித்த மதுரை திமுக நிர்வாகிகள்!
மதுரை: நேற்றிரவு விமானம் மூலம் மதுரை வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க மதுரை திமுக பிரமுகர்கள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் மட்டுமே அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
திருநெல்வேலியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்டாலின் இரவு 8.30 மணிக்கு விமானத்தில் மதுரை வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர்.
அவர்களை வரவேற்க முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர் வ.வேலுச்சாமி ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.
ஆனால், இப்போதைய மதுரை பகுதி திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், மேயர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் யாரும் வரவில்லை.
அவரை வரவேற்பதைத் தவிர்க்க திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளூரிலேயே இல்லாமல் வெளியே சென்றுவிட்டது தெரியவந்தது.
இதனால் ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர், மதுரை சரக டி.ஐ.ஜி., எஸ்.பி. உள்ளிட்டோர் தான் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து கார் மூலம் அவர் திருநெல்வேலி சென்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications