கேரள சாலைகளை மறித்து மதிமுகவினர் போராட்டம்: வைகோ-நெடுமாறன் கைது
முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர் பிரச்னைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்கு கேரளம் பங்கம் விளைவிப்பதாகக் கூறி கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடியில் கேரளத்துக்கு செல்லும் சாலையில் வைகோ தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
இதில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட் 3,000 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மறியல் செய்ய முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, வேலந்தாவலத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 500 பேரும், ஆனைக்கட்டியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 340 பேரும், பொள்ளாச்சி கோபாலபுரத்தில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் உ. தனியரசு உள்ளிட்ட 750 பேரும், வலந்தாயமரத்தில் தமிழ் தேசப் பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் உள்ளிட்ட 600 பேரும், நடுப்புணியில் மதிமுக விவசாயி அணித் தலைவர் சூலூர் பொன்னுசாமி மற்றும் உடுமலை 9-6 சோதனைச் சாவடியில் ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேச மூர்த்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதன் சிலை முன்பு நெல்லை மாநகர், புறநகர், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
இங்கு மறிப்பில் ஈடுபட்ட மதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், முன்னாள் எம்பி் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் கேரளா மாநில வாகனங்கள் அத்திவாசிய பொருட்களை விடிய விடிய ஏற்றி சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications