ஹெட்லியை விசாரிக்க இந்தியக் குழு நாளை அமெரிக்கா பயணம்

Subscribe to Oneindia Tamil

Headley
டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி அமெரிக்க புலனாய்வுத் துறையிடம் சிகாகோவில் சிக்கினார்.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்திற்காக பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டியதாக ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த விசாரணையின் போது, மும்பை தீவிரவாதத தாக்குதல் சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதை ஹெட்லி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஹெட்லியை விசாரிக்க இந்தியா அனுமதி கோரியது. ஆனால், அமெரிக்கரான ஹெட்லியை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி தர அமெரிக்கா பெரும் இழுத்தடிப்புகளைச் செய்தது.

இதுகுறித்து உள்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் தூதர்கள் மட்டத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை வைத்ததையடுத்து இப்போது ஹெட்லியை விசாரிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹெட்லியை விசாரிக்க நடத்துவதற்காக இந்திய புலனாய்வு குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் நாளை அமெரிக்கா செல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+