அதிமுக 'அதிகார மையம் தான்' காரணம்-சின்னசாமி

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக முத்துசாமியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கினார். அவருடன், அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று ஈரோட்டில் தனது ஆதரவாளர்களுடன் முத்துசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எந்தக் கட்சியில் சேருவது என்பது குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவு செய்யப்படும். அதிமுகவுக்கு துரோகம் செய்யவில்லை. அதிமுக தலைமை கேட்டுக் கொண்டபடியே கடிதம் மூலம் அனைத்து விவரங்களையும் அனுப்பினேன். ஆனாலும் எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கிவிட்டனர் என்றார்.
'அதிகார மையம் தான்' காரணம்-சின்னசாமி:
அதே போல அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள இன்னொரு முன்னாள் அமைச்சரான சின்னசாமி கூறுகையில், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக என்னை நீக்கியுள்ளனர். மேலும் முத்துசாமிக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நான் ஒரு போதும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதே இல்லை. அடுத்த கட்ட செயல்பாடு குறித்து ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து ஓரிரு நாளில் முடிவு செய்வேன்.
மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எண்ணமில்லை. கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், என் மீது நடவடிக்கை எடுக்கப்பட அதிமுகவில் உள்ள 'அதிகார மையம்தான்' காரணம் என்றார்.
2011ல் மீண்டும் திமுக ஆட்சி-அனிதா:
இந் நிலையில் திருச்செந்தூரில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சரும், இப்போதைய திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
தொடர்ந்து நடந்த 11 இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 2011ம் ஆண்டிலும் மீண்டும் திமுக அரசே அமையும்.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்வராக கருணாநிதி உள்ளார்.
திருச்செந்தூர் நகரில் ரூ. 14 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காயல்பட்டினம் நகரின் குடிநீர் பிரச்சனையைப் போக்க ரூ. 30 கோடியில் இரண்டாவது குடிநீர்க் குழாய் திட்டத்திற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications