ஆவடி: குடிநீர் திட்டத்துக்கான 2,000 பிளாஸ்டிக் குழாய்கள் தீயில் எரிந்து நாசம்
சென்னை: ஆவடி நகராட்சி பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்தாக சுமார் 3,000 பிளாஸ்டிக் குழாய்கள் ஆவடி திருமுல்லைவாயல் இந்திரா காந்திநகர் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு குழாயும் 25 முதல் 30 அடி நீளம், 3 அடி அகலம் கொண்டவை. இவற்றின் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்று தெரிகிறது.
இந் நிலையில் இன்று காலை இந்த பிளாஸ்டிக் குழாய்கள் திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கின. 12 தீயணைப்பு வண்டிகளும், விமானப்படையினரின் தீயணைப்பு வண்டியும் தீயை அணைக்க பல மணி நேரம் போராடினர்.
ஆனால், தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து ஜே.சி.பி. வண்டிகள் மூலம் எரியாத குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இவ்வாறு சுமார் 1,000 குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
ஆனால், சுமார் 2,000 பிளாஸ்டிக் குழாய்கள் முற்றிலும் எரிந்து விட்டன. தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக ஆவடி பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. வீடுகளுக்குள் புகை பரவியதால் வீடுகளைப் பூட்டிவிட்டு பலரும் வெளியேறினர்.
இந்தத் தீ விபத்தின் பின்னணியில் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications