இனம்-'திராவிடன்', மதம்-'நாத்திகன்': வீரமணி கோரிக்கை

திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிருபர்களிடம் வீரமணி கூறுகையில்,
தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திர கால்வாய்த் திட்டம், புராண கற்பனை கதைகளை காரணமாகக் காட்டி முடக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
இந்தத் திட்டத்தை மேலும் எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதற்கான பிரச்சாரத்தை இதுவரை மேற்கொண்டோம்.
வரும் ஜூன் 5ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் ஒத்த கருத்துடையவர்களை கலந்து கொள்ள அழைக்கிறோம்.
பெரியாரின் 132வது பிறந்த நாளை சமூகப் புரட்சி நாளாக செப்டம்பர் 18, 19 தேதிகளில் டெல்லி பெரியார் மையத்தில் கொண்டாட உள்ளோம்.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், சமூக நீதிக் கண்ணோட்டத்தில், சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதலை பிரதமர் அறிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் இரண்டே இரண்டு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்கள் என காரணம் கூறி, அதற்கென ஒரு குழுவை நியமித்து, பரிசீலிக்கப்படும் என்ற முடிவு பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களே சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்கின்றனர். அவர்கள் சமூக நீதிக்கு விரோதமானவர்கள்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் என்ற இடத்தில் திராவிடன் என்றும், மதம் என்ற இடத்தில் நாத்திகன் என்றும் தவறாமல் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications