மதுரையில் கடும் மின் தடை - சில நாட்களில் சரியாகும் என்கிறது மின்வாரியம்
மதுரை: மதுரையில் கடும் மின் தடை நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலைமை இன்னும் சில நாட்களில் சரி செய்யப்பட்டு விடும் என மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் நச்சாடலிங்கம் என்று கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு மின்வெட்டு நிலவி வருகின்றது. இதனால் பொது மக்கள் பெரும் துன்பத்தில் தவித்து வருகின்றனர்.
இது குறித்து மதுரை மண்டல தலைமை பொறியாளர் நச்சாடலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த ஜனவரியில் காற்றாலை மூலம் மின் கட்டமைப்புக்கு கிடைத்த மின் உற்பத்தி மிகக் குறைவாக இருந்ததால், மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மூன்று மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது.
மே மாதத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாகி 2,300 மெகாவாட் வரை மின் கட்டமைப்புக்கு கிடைத்து வந்ததால், கடந்த 27 ம் தேதி முதல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு மணி நேர மின்தடை அறிவிக்கப்பட்டது.
ஜூன் முதல் தேதி முதல் எதிர்பாராத நிலையில், காற்றாலை மின் உற்பத்தி 2,300 மெகாவாட்டில் இருந்து 100 மெகாவாட்டாக குறைந்தது. இதனால், மின் கட்டமைப்பை காப்பாற்ற தற்காலிகமாக அதிகப்படியாக மின் தடை செய்யப்படுகிறது. இது தற்காலிகமானது தான்.
எனவே, காற்றாலை மூலம் மின் உற்பத்தி மற்றும் தென்மேற்கு பருவமழை சாதகமாக உள்ளதால் ஒரு சில நாட்களில் மின்தடை சரிசெய்யப்படும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications