தமிழகம்: 'லைலா' தந்த காற்றாலை மின்சாரத்தை பறித்துச் சென்ற 'பெட்'!

இதனால் சென்னை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் மீண்டும் மிக அதிகமான மின்தடை ஏற்பட்டு வருகிறது.
வங்கக் கடலில் உருவான லைலா' புயல் மூலம் தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பலத்த காற்று வீசியது. ஆனால், அரபிக் கடலில் உருவான பெட் புயல் காரணமாக காற்றின் திசை மாறிவிட்டதால் காற்றாலை மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
லைலா புயல் ஏற்பட்டதையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு முன் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரமாக இருந்த மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
மேலும் தொழிற்சாலைகளுக்கான மின் உபயோகக் கடுப்பாடும் தளர்த்தப்பட்டது.
ஆனால், கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் மீண்டும் 4 மணி நேரம் முதல் 11 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, வாங்கபாளையம் பகுதிகளில் 11 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந் நிலையில், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் குறைந்துவிட்டதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்துக்கு காற்றாலை மூலமாக கடந்த மே 15ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை 2,000 மெகாவாட்டுக்கும் மேலாக மின்சாரம் கிடைத்ததால் முறைப்படுத்தப்பட்ட மின்சாரம் வழங்கப்பட்டது.
இது ஜூன் 1ம் தேதி 500 மெகாவாட்டாக குறைந்து, 3ம் தேதி 50 மெகாவாட்டாக குறைந்துவிட்டது.
இதனால், முறைப்படுத்தப்பட்ட மின்சாரத்தைக் கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையைச் சீர்படுத்த பிற மின் சந்தைகளில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
தென்மேற்குப் பருவ மழை இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கவுள்ளதால், காற்றாலை மின்னுற்பத்தி சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்நிலைமையை கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான 'லைலா' புயல் மூலம் கிடைத்த தென் மேற்குப் பருவக் காற்று 'பெட்' புயல் காரணமாக திசைமாறி வடக்கு நோக்கி சென்றுவிட்டதால், தமிழகத்தில் காற்றாலைகள் மூலமான மின்சாரத் தயாரிப்பு தடைபட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications