என்டிடிவி செய்திப் படம்: தி்ரும்பப் பெற இலங்கை வலியுறுத்தல்!
இந்தியாவின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் என்.டி.டி.வி. சமீபத்தில் 'பிளட் ஆன் வாட்டர்' என்ற தலைப்பில் செய்திப் படம் ஒன்றை வெளியிட்டது.
இதில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம், என்டிடிவி நிர்வாகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
முகாம்களில் 30000 பேர் மட்டுமே உள்ளனர்:
அவர் தனது கோரிக்கையில், "மூன்று முதல் ஆறு லட்சம் வரையிலான மக்கள் முள்கம்பிகளிலான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் செனோய் வெளியிட்ட கருத்து அபத்தமானது. 30,000 பேர் மட்டுமே தற்போது இடம்பெயர் முகாம்களில் எஞ்சியிருக்கின்றனர்.
பேராசிரியர் செனோயின் கருத்து அவரது கல்வித் தகுதிகளுக்கு இழுக்கை ஏற்படுத்துவதாகவுள்ளது. முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த செய்திப் படத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட பல காட்சிகள் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்டவை.
இந்த படத்தில் கருத்து வெளியிட்டுள்ள சில தமிழக மீனவர்கள் அப்பட்டமான பொய்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இலங்கை ராணுவத்தினர் 300 தமிழக மீனவர்களைப் படுகொலை செய்துள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது.
இந்திய கடற்பரப்புக்குள் பிரவேசித்து இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களைத் தாக்குவதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது.
பொருளாதார ரீதியாக நன்மை அடையும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரும் இலங்கைத் தமிழர்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களது புகலிடக் கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையிலேயே அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
என்.டி.டி.வி சேவை குறித்து இலங்கை மிகுந்த நன்மதிப்புக் கொண்டுள்ளது. என்.டி.டிவியின் சென்னைப் பிரிவு வெளியிட்டுள்ள இந்த செய்திப்படம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வரும் தருவாயில் இவ்வாறான ஆக்கங்களை ஒளிபரப்புச் செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
உண்மையான தகவல்களை வெளியிடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications