மீண்டும் திமுகவில் என்.கே.கே.பி. ராஜா!: திமுகவில் இணையும் சின்னச்சாமி!!
சென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக இருந்த என்.கே.கே.பி. ராஜா, அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அவர் மீது நில ஆக்கிரமிப்பு- ஆள் கடத்தல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்ததால் அமைச்சர் பதவிலியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந் நிலையில் பவானிசாகர் திமுக எம்.எல்.ஏ. சுப்பிரமணியத்தை மிரட்டியதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும், பின்னர் திமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந் நிலையில் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளது திமுக. இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்.கே.கே.பி. ராஜா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கழக பணியாற்ற அனுமதிக்குமாறு திமுக தலைவர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்று, அவரை நீக்கி வைத்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இன்று முதல் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமி திமுகவில் இணையவுள்ள நிலையில், இந்த முடிவை திமுக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வரும் 7ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்திக்க திட்டமிட்டுள்ளார் முத்துசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications