For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார்

Google Oneindia Tamil News

Sarath Kumar
திருச்செந்தூர்: பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டுமேன திருச்செந்தூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.

அகில இந்திய மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று தூத்துக்குடியில் இரூந்து கார் மூலம் ஆத்தூர், ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த அவரை திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அர்ச்சகர்கள் வரவேற்றனர்.

திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில்,

தமிழ் திரைப்பட நடிகர் சங்க மேலாளர் இல்ல திருமண விழாவி்ல் கலந்து கொள்ளவும், திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற வேண்டுதலை நிறைவேற்றவும் நான் எனது குடும்பத்தினருடன் வந்துள்ளேன்.

சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பிப்பதற்கு 3 ஆண்டுகள் பாடுபட வேண்டியிருந்தது. தற்போது கட்சியின் கூட்டமைப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றோம்.

அரசியலில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. காலதாமதம் ஆனாலும் மக்களிடம் அது நிலைத்து நிற்க வேண்டும். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் எடுக்க வேண்டிய முடிவு ஆகும். பாமகவின் அரசியல் நிலையை மக்கள் தற்போது தெரிந்து கொண்டு விட்டார்கள்.

கள் இறக்கும் போராட்டத்திற்கு ஆரதவு தெரிவிப்பதன் மூலம் மீண்டும் எல்லோரையும் மரம் ஏற சொல்லும் அர்த்தமல்ல. கள்ளை ஆரோக்கிய பானமாக தயார் செய்து அதனை டின்னில் அடைத்து டாஸ்மாக் கடைகளில் விற்க செய்யலாம். இலங்கையில் அவ்வாறு தான் கள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு செய்தால் புதிய தொழில் வாய்ப்பு உருவாகிறது.

வருகின்ற ஜூலை 19ல் தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கட்சியின் மூ்ன்றாமாண்டு நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடக்க உள்ளது.

ஆளும் கட்சி செயல்படுத்தியுள்ள காப்பீ்ட்டு திட்டம், ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் வசதியை தமிழகத்திற்கு கொண்டு வந்தது உள்ளிட்ட நல்ல திட்டங்களை சமக வரவேற்கிறது. ஆனால் மின்சார தட்டுபாடு போன்ற குறைபாடுகளை மக்களுக்கு சுட்டிக் காட்டுவதில் நாங்களும் தயங்கியதில்லை என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X